How to prepare for TNPSC Group 1, 2 / 2A 2021 Preliminary Exam New Syllabus ?
(TNPSC குரூப் 1 மற்றும் 2 தேர்வுகளுக்கான முதனிலைத் தேர்விற்கு (Preliminary Exam) ஒரே பாடத்திட்டம் (Syllabus) இருப்பதால், இந்த கட்டுரை இந்த இரண்டு தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.)
”அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரசாங்க வேலையாக இருக்க மேண்டும்” என்று கூறுவார்கள். என்ன தான் தனியார் துறைகள் அதிக ஊதியம் வழங்கினாலும், பணி திருப்தி (job satisfaction) மற்றும் பணி பாதுகாப்பு (job security) போன்றவற்றில் அரசுப் பணி போன்று வராது. மேலும், மக்களுக்கு சேவை செய்வதற்கான நேரடி வாய்ப்பு, அரசுப் பணியாளர்களுக்கே வழங்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும். கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் , அரசு ஊழியர்களின் பணிகள் எவ்வளவு விலை மதிப்பற்றவை என்பதை நாம் அறிவோம். மேலும், தற்போதைய சூழலில் , பெரும்பாலான இளைஞர்களின் பார்வை அரசு வேலைகளை நோக்கி திரும்பியுள்ளது அதிக போட்டியையே உருவாக்கும். இங்கே வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி தீவிரமான கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையுடன் படித்தால் நீங்கள் எந்த ஒரு பயிற்சி நிறுவங்களுக்கும் செல்லாமலேயே, குரூப் 1, 2,2A முதனிலைத் தேர்வில் (Preliminary exam) எளிதாக வெற்றி பெற இயலும்.
- Deputy Collector
- Deputy Superintendent of Police
- Assistant Commissioner (Commercial Taxes)
- Deputy Registrar of Co-operative Societies
- Assistant Director of Rural Development
- District Officer (Fire and Rescue Services)
- Industrial Co-operative Officer in the Industries and Commerce Department
- Deputy Commercial Tax Officer
- Probation Officer in Social Defence Department
- Junior Employment Officer
- Probation Officer in Prison Department
- Assistant Inspector of Labour in the Labour Department
- Sub Registrar, Grade-II
- Special Assistant in the Vigilance and Anti corruption Department
- Municipal Commissioner, Grade-II
- Assistant Section Officer in Secretariat
- Supervisor of Industrial Co-operatives in the Industries and Commerce Department
- Audit Inspector in the Audit Wing of Hindu Religious and Charitable Endowments Administration Department
- Assistant Inspector in Local Fund Audit Department
- Handloom Inspector in Handlooms and Textiles Department
- Senior Inspectors in Milk Production and Dairy Development Department
- Senior Inspector of Co-operative Societies in Department of Registrar of Co-operative Societies
- Supervisor / Junior Level-11 Superintendent in Tamil Nadu Agricultural Marketing / Agricultural Business Department
- Audit Assistant in Accounts Branch of Highways and Rural Works Department
- Executive Officer, Grade-II Level-8 in Town Panchayats Department, Tirunelveli District
- Revenue Assistant in Revenue Department
- Personal Clerk in Secretariat and TNPSC
- Steno-Typist in Tamil Nadu Legislative Assembly
- Assistant in various Departments in the Tamil Nadu Ministerial Service, Divisions of Commercial Taxes Department and Tamil Nadu Secretariat Service / Tamil Nadu Public Service Commission/ Legislative Assembly Secretariat Service
- Lower Division Clerk in Tamil Nadu Legislative Assembly Secretariat
- முதனிலைத் தேர்வில் (Preliminary Exam) நீண்டகாலமாக இருந்துவந்த மொழி (பொதுத்தமிழ் / General English) தாள்கள் முழுவதுமாக நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 200 மதிப்பெண்களுடன் ஒரே பொது அறிவுத் தாளாக மாற்றப்பட்டுள்ளது
- TNPSC தேர்வு வரலாற்றில் முதல் முறையாக அலகு – VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் மற்றும் அலகு – IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் என இரண்டு புதிய அலகுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
Question : பின்வரும் உணவுப் பொருட்களை, அவற்றில் அடங்கியுள்ள நீரின் அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையில் அடுக்குக ?
1. காளான்
2. முட்டை
3. பால்
4. வெள்ளரி
Options :
A) 1 - 2 - 3 - 4
B) 2 - 4 - 1 - 3
C) 4 - 1 - 3 - 2
D) 3 - 2 - 1 - 4
Answer : C) 4 - 1 - 3 - 2
Explanation : (நீரின் அளவு)- வெள்ளரி -95%, காளான் - 92%, பால் - 87 %, முட்டை - 73 %
எப்படி படிப்பது ?
கனவு காணுங்கள் !
”உறக்கத்தில் வருவதன்று கனவு. நம்மை உறங்க விடாமல் செய்வதுதான் கனவு”என்றார் அய்யா அப்துல் கலாம். எந்த ஒரு இலக்கிலும் வெற்றி பெறுவதற்கு, ’என்னால் நிச்சயம் அந்த இலக்கை அடைந்து விட முடியும்’ என்ற தன்னம்பிக்கை அவசியமாகிறது. அந்த தன்னம்பிக்கை உங்கள் கனவாக மாறும் போது, அந்த கனவே உங்களை அந்த இலக்கை நோக்கி இழுத்துச் செல்கிறது, வெற்றியை நோக்கி உங்களைச் செயல்பட வைக்கிறது. எனவே, குரூப் 2 / 2A தேர்விற்கு தயாராகும் போதே, நீங்கள் ஒரு குரூப் 2 அலுவலராகி விட்டதாகவே கனவு காணுங்கள், அனு தினமும் அதை நோக்கியே பயணியுங்கள். கனவு நிச்சயம் நிறைவேறும்.
”கனவுகளைச் சுமக்கின்ற
கண்களைக்
கண்டதும் திறக்கின்றன
வாய்ப்புகள் என்னும்
வாசல் கதவுகள் ....
கனவு மெய்ப்பட
வேண்டும் என்றால்
கனவு “மெய்” எனப்
பட வேண்டும்
கனவு மெய்யாகப்
பாடுபட வேண்டும்/
”மெய்யாகப்” பாடுபட வேண்டும்”
-முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன்.ஐ.ஏ.எஸ். (சிறகுக்குள் வானம்)
திட்டமிடுங்கள் !
எந்த ஒரு செயலையும் நினைத்தவண்ணம் செய்து முடிக்க வேண்டுமானால் திட்டமிடுதல் மிக மிக அவசியம். "நீங்கள் திட்டமிடத் தவறினால், நீங்கள் தோல்வியடையத் திட்டமிடுகிறீர்கள்" ( “If you fail to plan, you are planning to fail!” ― Benjamin Franklin) என்பது ஆங்கில பொன்மொழி. குரூப் 1, 2/2A தேர்வுக்கு தயாராகும் நீங்கள் , குறுகிய காலத்திற்குள் அதற்கான பாடத்திட்டத்தை படித்து முடிப்பதற்கு ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். எவ்வளவு பெரிய செயலையும், சிறிது சிறிதாக பிரித்து திட்டமிட்டு செய்யும் போது அந்த செயல் 100% சாத்தியமாகிறது. இதையே, “அளவிடப் படும் எதுவும் மேம்படும்” (What Gets Measured Gets Improved.) என்று உலகின் மிகச்சிறந்த மேலாண்மை வல்லுநரான பீட்டர் டிரக்கர் கூறுகிறார். எனவே குரூப் 2 தேர்விற்கான பாடத்திட்டத்தை 2 அல்லது 3 மாதத்திற்குள் படித்து முடிக்கவுள்ளேன், அதில், அறிவியலை இவ்வளவு நாட்களில், வரலாறை இவ்வளவு நாட்களுக்குள் முடிப்பேன் என நீங்களாகவே திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள். உங்கள் திட்டத்தை எழுத்து வடிவமாக்குங்கள், அந்த திட்டத்தின் படி படிக்க தொடங்குங்கள். வெற்றி நிச்சயம்!
உங்களுக்கான மாதிரித் திட்டம் (Our Test Batch Schedule for Group 2,2A 2020)
இன்றே தொடங்குங்கள் !
நல்ல துவக்கம் பாதி வெற்றி என்பர். எனவே உங்களால் முடியும் என்று தன்னம்பிக்கையோடு குரூப் 1 அல்லது 2 தேர்வுக்கு தயாராக முடிவெடுத்தப் பின்னர், அதனை நாளை தொடங்கலாம், அடுத்த வாரம் தொடங்கலாம் என எக்காரணம் கொண்டும் தள்ளிப் போட வேண்டாம். எனவே , நல்ல நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம். இன்றே தொடங்குங்கள், அதுவும் இப்போதே தொடங்குங்கள்.
ஒத்திப் போடுவதென்பது முன் கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட தோல்வி. தாமதிக்கப்படுகிற செயல்களின் விலை ஏறிக் கொண்டே போகிறது.தொடர்ந்து படியுங்கள் !
-முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன்.ஐ.ஏ.எஸ். (சிறகுக்குள் வானம், ப.71)
”தொடங்குவதில் இல்லை, தொடர்வதில் தான் இருக்கிறது வெற்றி” என்று கூறுவார்கள். புதிதாக போட்டித் தேர்விற்கு படிக்க தொடங்குபவர்கள், மிக ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிப்பார்கள். ஓரிரு நாட்கள் தொடர்ந்து படித்து விட்டு, பின்னர் ஏதோ சூழ்நிலைகளினால், ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு விடுவார்கள். இவ்வாறு இடைவெளி விட்டு விட்டு, மறுபடியும் படிப்பை தொடர்வதற்கு பேட்டரி பழுதான வாகனத்தை ஸ்டார்ட் பண்ணுவதற்கு முயல்வதைப் போல சிரமப்பட வேண்டியிருக்கும்.
போட்டித் தேர்வுக்கு தயாராவதற்கும் மாரத்தான் ஓட்டப் போட்டிக்கும் மிகவும் தொடர்பு இருக்கிறது. மாரத்தான் பந்தைய மைதானத்திலிருந்து தொடங்கும் போது ஆயிரக்கணக்கில் கூட்டமாகக் குவிந்திருப்பார்கள். நெடுந்தூர ஓட்டம் என்பதால் யார் முன்னால் நிற்கிறார்கள், யார் பின்னல் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி எவரும் கவலைப் படுகிறதில்லை, பந்தையம் தொடங்கி நேரம் செல்ல செல்ல தொடர்ந்து ஓடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். போட்டியின் இறுதி இலக்கை நெருங்கும் போது வெகு சிலரே ஓடிக் கொண்டிருப்பார்கள். கடைசியில் அவர்களில் சிலரே வெற்றி பெறுவார்கள். இதிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் “விரைந்து ஓடுதலை விட தொடர்ந்து ஓடுதலே வெற்றியைத் தரும்” எனவே எந்த சூழ்நிலையிலும் தொடர்ந்து படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
கடின உழைப்பே வெற்றிக்கான ஒரே வழி !
”எறும்பூர கல்லும் தேயும்” , ”பையத் தின்றால் பனையையும் தின்னலாம்” என்று படித்திருப்பீர்கள். எறும்பில் கால்கள் எவ்வளவு மென்மையானவை, அவை ஊரும் போதது கல்லும் தேய்கிறது என்றால், தொடர்ந்து செய்யும் முயற்சியினால் நம்மால் அடைய முடியாத செயல்களே இல்லை எனலாம். எனவே உங்கள் குரூப் 1 / 2 தயாரிப்பில் உங்களால் இயன்ற வரையில் கடின உழைப்பைச் செலுத்துங்கள். ஏனெனில் வெற்றிக்கு ஒரே வழி ’கடின உழைப்பு’ , அந்த கடின உழைப்பிற்கு மாற்று வழி எதுவுமே கிடையாது.
என்னால் முடியுமா ?
உன்னால் பறக்க முடியவில்லை என்றால் ஓடு, உன்னால் ஓட முடியவில்லை என்றால் நட, உன்னால் நடக்க முடியவில்லை என்றால் தவழ்ந்து செல். நீ என்ன செய்தாலும் (உன் இலக்கை நோக்கி) முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் - மார்ட்டின் லூதர் கிங்ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும் போதும், பல மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டு, எவ்வளவு நேரம் படித்தாலும் படித்தது நினைவில் நிற்கவில்லை, நான் வேலைக்கு சென்று விட்டு படிக்கிறேன்...நேரம் போதவில்லை, நான் இல்லத்தரசி ... நேரம் போதவில்லை என பலவிதமான காரணங்களைக் கூறி அவர்களின் தோல்வியை தாங்களாகவே நியாயப் படுத்திக் கொள்ளுவதுண்டு. அதற்கு நான் அடிக்கடி கூறும் பதில்களையே இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
’எவ்வளவு நேரம் படித்தாலும் நினைவில் நிற்கவில்லை’ என்பதற்கான பதில், போட்டித் தேர்விற்கு படிப்பதாக நினைக்காமல் வாழ்க்கைக்காக படிப்பதாக, புதிதாக ஒன்றை தெரிந்து கொள்வதற்காகப் படிப்பதாக நினைத்துக் கொண்டு படித்தால் எளிதாக நினைவில் நிற்கும். இறைவனின் படைப்பில் அனைவருக்குமே மூளை சராசரி 1.5 கிலோ கிராம் எடை தான். ' தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு’ (தோண்டிய அளவே மணல்கேணியில் நீர் ஊறும். அதுபோல கற்கும் அளவே மாந்தர்க்கு அறிவு ஊறும்) என வள்ளுவர் கூறுவது போல, நாம் பயன்படுத்த பயன்படுத்த தான் மூளையின் கற்றல் திறன் அதிகரிக்கும். எனவே, எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களை உங்களுடன் ஒப்பிடாதீர்கள் (அவர்கள் உங்களை விட அதிகமாக மூளையைப் பயன்படுத்தியிருக்கலாம், உங்களுக்கும் அந்த வாய்ப்பை இறைவன் சமமாகவே வழங்கியுள்ளார்) நீங்களும் தொடர்ந்து படிக்கும் போது அவர்களை விட சிறந்தவர்களாக மாற முடியும். தய்வு செய்து தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.
’நான் வேலைக்கு சென்று விட்டு படிக்கிறேன்...நேரம் போதவில்லை, நான் இல்லத்தரசி ... நேரம் போதவில்லை’ என்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம் இல்லை. நாம் ஒரு நாளில் காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரையில், தேவையில்லாத காரியங்களுக்கு (டி.வி. , மொபைல் etc.) எவ்வளவு நேரங்களை செலவிடுகிறோம் என சுய பரிசோதனை செய்தால், அவற்றில் நாம் படிப்பதற்கான சில மணிநேரங்கள் நிச்சயம் மிஞ்சும். எனக்கு தெரிந்த எத்தனையோ பேர், இல்லத்தரசிகளாக இருந்து கொண்டே, தனியார் நிறுவனங்களில், அரசு வேலைகளில் இருந்து கொண்டே டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு தயாராகி வென்றிருக்கிறார்கள்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் . (குறள் 605)
சோம்பலும், காலம் நீட்டித்துக் காரியம் செய்யும் குணமும், மறதியும், உறக்கமும் ஆகிய இந்த நான்கு குணங்களும் அழியும் இயல்புடையோர் விரும்பி ஏறும் மரக்கலமாகும்.
- 6-12 வரையிலான சமூக அறிவியல் / வரலாறு பாடப்புத்தகங்கள்
- முற்கால தமிழ்நாட்டு வரலாறு - டாக்டர் க. வெங்கடேசன்
- தற்கால தமிழ்நாட்டு வரலாறு – டாக்டர் க. வெங்கடேசன்
- 6 முதல் 10 வரையிலான புதிய மற்றும் பழைய பள்ளி கணித பாடப் புத்தகங்களில், TNPSC திறனறிவு பாடத்திட்டத்திலுள்ள பகுதிகள் மட்டும்.
- கணியன் (பாகம் 1,2) புத்தகங்கள்
- டி.என்.பி.எஸ்.சி முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்டிருக்கும் திறனறிவு தொடர்பான வினாக்களை முடிந்த வரை பயிற்சி செய்வது அவசியம்.
Online Exam & PDF | ரூ.1200/-